உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்கும் போது போதை ஆசாமி ஒருவர், இளைஞன் மீது தாக்குதல் நடாத்தி, ஒரு தொகை பணத்தை அபகரித்தமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் தாக்குதலாளியான போதை ஆசாமியை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்து யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை வாசலில் கடந்த சனிக்கிழமை (07) ...