Indian Express Tamil
ரூ.1 லட்சத்துக்கு ரூ.44,995 வரை லாபம்: போஸ்ட் ஆபீஸ் தரும் அசத்தல் ரிட்டர்ன்ஸ்
முதலீட்டுத் துறையில் எத்தகைய ரிஸ்க்கும் எடுக்க விரும்பாதவர்களுக்கு, தபால் அலுவலகத்தின் கால வைப்பு (Time Deposit - TD) ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வங்கிகளில் வழங்கப்படும் நிலையான வைப்புத்தொகைகளுடன் ஒப்பிடும்போது, தபால் அலுவலகக் கால வைப்புத் திட்டங்கள் மிகவும் லாபகரமான மற்றும் சிறப்பான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. தபால் அலுவலகத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்புத்தொகை (FD) உருவாக்கும் வசதிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு கால அளவிற்கும் வெவ்வேறு வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்களது முதலீட்டை எவ்வளவு நீண்ட காலத்திற்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அதிக வட்டி லாப…