Indian Express Tamil
TNPSC group 4 exam: சரி பாதியாக சரிந்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை? கட் ஆஃப் குறையுமா?
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையுமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனகாப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அறிவித்தது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்…