Nakkheeran
'மாவட்ட ஆட்சியருக்கு ஆ@பாசக் குறுஞ்செய்தி; இதற்கு என்ன பதில்?-கனிமொழி ஆவேசம்
மாவட்ட ஆட்சியருக்கே தவெகவினரால் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைத்தள பதிவில், 'கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன. இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டத…