உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நபர் கொலை..

காஞ்சிபுரம் மாநகராட்சி அரவிந்தன் நகர் அருகே, கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நபர், மர்மமான முறையில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி தினத்தன்று நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், கற்கள் மற்றும் மதுபான பாட்டில்களால் தலை மற்றும் கண் பகுதிகளில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.