உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50க்கு கொள்முதலா?” - அமைச்சர் பரபரப்பு விளக்கம்!

தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது. அதாவது வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை, மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை உச்ச நேரங்களில் (Peak Hours) தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வாங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டிருந்தது. அதன்படி, மொத்தம் 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 என்ற விலையில் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. ஏற்கனவே, அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்,…