Nakkheeran
'குவாரி அனுமதியை ரத்து செய்யாத வரை தீபாவளியும் இல்லை, பொங்களும் இல்லை'- போராட்டத்தில் 5 கிராம மக்கள்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள நகரம் ஊராட்சியில், விதிமுறைகளை மீறி அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படும் குவாரிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை உடனடியாக நிரந்தரத் தடையாக மாற்ற வலியுறுத்தி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 5 கிராம மக்கள் தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்துத் தங்களின் தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். வீரிருப்பு, துரைச்சாமிபுரம், நகரம், ஈச்சம்பொட்டல்புதூர் மற்றும் வடமலாபுரம் ஆகிய 5 கிராமங்களின் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்த அதிரடிப் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகமான அளவு கனிம கற்கள் வெட்டி எடுப்பதற்காக விதியை மீறி நான்கு அடி முதல் ஐந்து அடி…