Vikatan
பயிர்க் கடன் பெறுவதில் சிக்கல்... புதிய நிபந்தனைகளால் பரிதவிக்கும் குத்தகை விவசாயிகள்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்! தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் சுமார் 40 சதவிகிதத்தினர் குத்தகை நிலங்களில்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இல்லையென்றால், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும். ஆனால், இதை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் பெறுவதில் குத்தகை விவசாயிகளுக்குக் கடுமையான நெருக்கடிகளும் தடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன…