Indian Express Tamil
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: இந்த மாவட்டங்களில் இன்று மழை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்தமான் கடல் பகுதிகளிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் வானிலையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, சென்னை வானிலை ஆ…