Hindu Tamil Thisai
வேலூர்: பாமக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர் சுட்டுப் பிடிப்பு
வேலூர்: குடியாத்தம் அருகே முன்விரோத தகராறில் பாமக பிரமுகர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கொலையாளி பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை இன்று (நவ.10) அதிகாலை பறிமுதல் செய்ய முயன்றபோது காவல் துறை உதவி ஆய்வாளர் ராஜாவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். வேலூர் மாவட்டம்…