Nakkheeran
’காவல்துறையின் ட்ரோன் கேமாரா முன்பாகவே குஷியாக நடனம்’; மதுபிரியரின் அட்டகாசம்!
காவல்துறையின் கண்காணிப்பு கேமராவை பார்த்து மதுப்பிரியர்கள் ஓட்டம் எடுத்த காட்சிகள் இணையத்தில் வைராலாகி வருகின்றன. சேலம் மாவட்டத்தின், அன்னதானப்பட்டி அருகே சில நபர்கள் மது அருந்திவிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்களை ட்ரோன் கேமரா மூலமாகக் கண்காணித்தனர். இந்நிலையில், காவல்துறையினர் கண்காணிப்பிற்காகப் பயன்படுத்திய ட்ரோன் கேமராவைப் பார்த்த மதுபிரியர் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். அப்போது, அந்த கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் ட்ரோன் கேமாரவின் முன்பாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில்…