Indian Express Tamil
கடந்த ஆண்டை விட அதிகரித்த குரூப் 4 தேர்வு விண்ணப்பம்; ஒரு இடத்துக்கு இத்தனை பேர் போட்டி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இந்த ஆண்டு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி 4 நாட்களில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அறிவித்தது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு மூலம் 291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வர…