Indian Express Tamil
காலையில் பனியில் நனையும் மலைகள்... வாசலில் வெயில் காயும் மக்கள்; மூணாரில் தொடங்கிய அழகான குளிர்காலம்
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாரில் தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளதால், அப்பகுதி முழுவதும் ரம்மியமான இயற்கைச் சூழல் நிலவி வருகிறது. அதிகாலையில் மலை முகடுகளைத் தழுவிச் செல்லும் அடர்ந்த பனிமூட்டம், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே நிலவும் குளிர்ந்த காற்று, பகல் நேரத்தில் இதமாக வீசும் மிதமான வெயில் என மூணார் தற்போது இயற்கை அழகின் உச்சத்தில் காட்சியளிக்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் மூணாரின் தற்போதைய காலநிலையை வெகுவாக ரசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மூணார் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் மழ…