IBC Tamil
தீபாவளி தினத்தில் வாகன விபத்து: கைது செய்யப்பட்ட மனோ எம்.பிக்கு காவல்துறை பிணை
கடந்த நவம்பர் 8ஆம் திகதி தீபாவளி பண்டிகை அன்று இரவு வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியமை தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில், மனோ கணேசன் செலுத்திச் சென்ற லேண்ட் குரூஸர் ரக ஜீப் வாகனம் மற்றுமொரு ஜீப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய க...