Polimer News
விசாரணைக்கு வந்த நபரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக புகார்..!
தூத்துக்குடி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த முத்து முருகன் என்பவரை உதவி காவல் உதவியாளர் மாரிசெல்வம் அவதூறாக பேசி கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தீபாவளியன்று முத்து முருகனின் உறவினரான ஆறுமுக பாண்டியனை தேடி வந்ததாகவும் அவர் இல்லாததால் முத்து முருகன் மற்றும் அவரது தாயாரை உதவி ஆய்வாளர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் திரண்டதால் முத்து முருகனை விசாரணைக்கு வர சொல்லி மாரிசெல்வம் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த முத்து முருகனை உதவி ஆய்வாளர் மாரிசெல்வம் தாக்கியதில் படுகாயமடைந்ததாக புகார் எழுந்துள்ளது.