Indian Express Tamil
இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது; ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் கோவை போலீஸ்
கோவை மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோரைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அவ்வப்போது ட்ரோன் கேமராக்களைப் பறக்கவிட்டு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சிங்காநல்லூர் காவல் நிலைய எ…