IBC Tamil
ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ள மாகாணசபை தேர்தல்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்
இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் நடத்த அரசாங்கம் விரும்புகிறது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அடுத்த ஆண்டு வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணம் என கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து இந்த ஊட...