Nakkheeran
கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (36)
கலைஞர் செய்த முதல் மரியாதை! திருவள்ளுவர் நட்பைப் பற்றி குறளில் இப்படிச் சொல்லுகிறார். "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்' அதாவது, இருவர் எப்பொழுதும் சேர்ந்திருப்பதோ, வெகு நாட்கள் பழகியிருப்பதோ நட்புக்குத் தேவையில்லை. இருவருடைய ஒத்த உணர்ச்சியே நட்புக்கான உரிமை தரும். உடனிருப்பது, உணர்ந்திருப்பது... இதனைப் புரிந்துகொண்டால் வெவ்வேறு பாதை, பயணம், இலக்கு கொண்டோர் கூட நட்பில் சிறந்து விளங்கமுடியும். இந்தப் பண்புக்கு எடுத்துக்காட்டு அப்பாவும் கலைஞர் அவர்களும். இருவரும் முதலில் சந்தித்தது எப்போது? அப்பா திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த காலம். போஸ…