உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அரசியலை வீழ்த்திய அந்தரங்கம் -நந்தன் மாசிலாமணி

எலியட் லாரன்ஸ் ஸ்பிட்சர் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர். அதற்கும் முன்னதாக நியூயார்க்கின் தலைமை அரசு வழக்கறிஞராக பணியாற்றியபோது, மாஃபியா கும்பல்களுக்கு எதிராகவும், நிதி மோசடிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுத்ததால் "மிஸ்டர் க்ளீன்' என்று பாராட்டப்பட்டவர். இந்த பிம்பத்தின் மீது பாலியல் கறை படிந்ததால் சர்ச்சைக்குள்ளானார். எலியட் ஸ்பிட்சர் நியூயார்க்கில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையான பெர்னார்ட் ஸ்பிட்சர் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் அதிபர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1981-ல் இளங்கலைப் பட்டமும், பின்னர் 1984-ல், ஹார்வர்ட் லா ஸ்கூலில் சட்டத்துறையில் ஜே.டி. பட்…