உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

த.வெ.க. Vs தி.மு.க.! பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் சர்ச்சை!

கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுத் தாளரும், நூல் பரிந்துரைக்குழு உறுப் பினருமான பெருமாள் முருகன் ஆதா ரங்களோடு கட்டுரை எழுதவும், அது தமிழ்நாட்டு அரசியலிலும், இலக்கிய உலகிலும் அதிர்வை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டில் கூறப்படுவதாவது, அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் உள்ளிட்ட சில பதிப்பகங்களின் நூல்கள் மட்டும் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. அந்த பதிப்பகங்களில் நூல் வெளியிட்டுள்ள ஆசிரியர்களின் பெயர்களும் புதிதானவை. அதிலும், திரிஷா விஜய், விஜய பாலு, விஜய செல…