உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மீண்டும் புலிகள் இயக்கம்!

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் எப்போதுமே நவம்பர் மாதம் என்பது உணர்வுபூர்வமான மற்றும் திருப்புமுனைகளைக் கொண்ட மாதமாகப் பார்க்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த போராளிகளை நினைவேந்தும் இந்த மாதத்தின் தொடக்க நாளான நவம்பர் 1ஆம் தேதியன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ரகசிய மற்றும் பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஈழ அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய ஒரு குழுவினர், புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். கடந்த 1989ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக் காலத்தில் உருவான "தலைமைப் பு…