Hindu Tamil Thisai
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் தர்காவில் 470-ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கடந்த 7-ம் தேதி மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 19-ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து…