Indian Express Tamil
பூக்குது… காய்க்க மாட்டேங்குதா? எலுமிச்சைச் செடியில் காய்கள் பிடிக்க இந்த 5 விஷயங்களைச் செய்யுங்க
எலுமிச்சைச் செடியில் பூக்கள் அதிகமாகப் பூத்தாலும், அவை சில நாட்களிலேயே உதிர்ந்து விடுகிறதா? காய்கள் உருவானாலும் சிறியதாக இருக்கிறதா? இதற்குச் சரியான ஊட்டச்சத்து கிடைக்காதது, போதிய சூரிய ஒளி இல்லாமை, முறையற்ற நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, அக்டோபர் மாதம் எலுமிச்சைச் செடிகளை நடுவதற்கும், அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது. வீட்டில் தொட்டியில் எலுமிச்சைச் செடி வளர்ப்பவர்கள், சில எளிய பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் செடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எலுமிச்சைச் செடி வளர்ப்பதற்கு முதலில் சரியான செடியைத் தேர்ந்தெடுப்பது அவச…