Nakkheeran
சமக்ர சிக்ஷா முதல் மருத்துவ நூல் திட்டம் வரை: மக்கள் பணம் எங்கே போனது?-கேள்விகளை அடுக்கும் நக்கீரன் ஆசிரியர்
தமிழக அரசு புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காகப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, கலைஞர் மருத்துவ நூல் மொழிபெயர்ப்புத் திட்டம் மற்றும் மத்திய அரசின் சமக்ர சிக்ஷா ஒருங்கிணைப்புத் திட்டம் எனப் பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் திட்டங்களின் பெயரால் ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் பணம், வெளிப்படைத்தன்மை இல்லாமல் சில குறிப்பிட்ட நபர்களின் கைகளுக்கு மட்டுமே செல்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து நக்கீரன் டிவியின் 'சூடா ஸ்ட்ராங்கா' எனும் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட நக்கீரன் ஆசிரியர் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, "மத்திய அர…