Daily Thanthi
மக்கள் கட்டணம் செலுத்தி பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை தரமாக இருப்பதில்லை - மதுரை ஐகோர்ட்டு அதிருப்தி
மதுரை, மக்கள் கட்டணம் செலுத்தி பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை தரமாக இருப்பதில்லை என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாலம் சேதம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நெல்லை-தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலையானது, அந்த வழியாக செல்லும் தாமிரபரணி ஆற்றை கடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இருவழியிலும் ரூ.25 கோடி மதிப்பீட்டில்…