Nakkheeran
பேரூர் பட்டீஸ்வரனுக்கு மாணவிகளின் நவராத்திரி விழா நாட்டியாஞ்சலி! - சுந்தர் சிவலிங்கம்
உலகில் பல கலைகள் இருந்தாலும், பரதநாட்டியக் கலை தொன்மை மிக்கதாகப் போற்றப்படுகிறது. பரதம் வெறும் நடனக் கலை மட்டுமல்ல; இறைவனோடு நம்மை இணைக்கும் ஒரு தெய்வீகக் கலையாகும். பிரபஞ்ச இயக்கமான நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தையும் அதிநுணுக்கமான பலவகை முத்திரைகள், அபிநயங்கள் அடங்கிய பரதத்தை அடிப்படையாகக் கொண்ட பரதம், பாரதநாட்டின் பெருமை மிக்க பாரம்பரியக் கலையாகத் திகழ்கிறது. பல ஆண்டுகள் தவம்செய்து, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இறைவனை அடைய முயற்சி செய்பவர்களைவிட பரத நாட்டிய கலையில் மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனை நினைத்து, நடனமாடும்போது நம்மையே மறந்து அந்த இறைவனுடன் ஒன்றிணைந்த ஓர் அற்புதமான ஆன்மிக அனுப…