உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சிற்பிக்கு கண் கொடுத்த சுப்பிரமணியர்

உலக உயிர்களைப் படைக்கும் ஆற்றல் பெற்றவர் பிரம்மா. தன் படைப்புத் தொழில்மீது அவருக்கு ஒரு கர்வம் இருந்தது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானைக் காண்பதற்காகச் சென்ற பிரம்மா, அங்கே வெளிப்புறம் அமர்ந்திருந்த விநாயகரையும், முருகனையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் சிவனைத் தரிசிக்க உள்ளே சென்றார். இதைக்கண்டு கோபம் அடைந்த முருகன், பிரம்மாவைத் தடுத்து நிறுத்தி, "பிரணவ மந்திரத்திற்குப் பொருள் சொல்லிவிட்டு உள்ளே செல்லுங்கள்' என்று கூறினார். "பொருளா? அப்படியென்றால் என்ன?' என்று கூறியபடி திகைத்து நின்றார் பிரம்மா. அதனால் பிரம்மாவைச் சிறையில் அடைத்தார் முருகன். பிரம்மா சிறையில் இருந்ததால், அவரது படைப்புத் தொழிலை ம…