Nakkheeran
அகிலத்தையும் காக்கும் அதிசக்திஸ்வரர் - யோகி சிவானந்தம்
எண்ணம் நலமாக இருந்தால் எதுவும் எல்லாம் நலமாக இருக்கும். பக்தி செய்வதில் உண்மையான அன்பும் நேர்மையும் இருக்க வேண்டும். உதாரணமாக செல்வந்தர் ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார். அவரது கார் கோவில் வாசலில் வந்து நிற்கிறது. காரில் இருந்து அவர் கீழே இறங்குகிறார். ஆஜானுபாகுவான தோற்றம், பெரும் கோடீஸ்வரர் என்பது அவரது வாகனமும் அவர் அணிந்திருக்கக்கூடிய நகைகளும் உணர்த்துகிறது. கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் யாசகர்கள் அவர் வருவதைப் பார்த்து இறைவனிடம் வேண்டுகிறார்கள். இவர் பெரிய கோடீஸ்வரனாக இருப்பார்போல் தெரிகிறது. இவர் தரிசனம் முடித்து திரும்பி வரும்போது எங்கள் அனைவருக்கும்…