Nakkheeran
சித்தர்களைத் தேடி மலைப்பயணம்! 16 - முத்தாலங்குறிச்சி காமராசு
முன் வரலாறு சுருக்கம்... தோரணமலையில் ஒரு காலத்தில் தற்போது உள்ளது போல படிகள் கிடையாது. இந்தப்படிகளை மருத்துவர் ஆவுடையானூர் டாக்டர் தர்மராஜ் அவர்கள் கட்டியுள்ளார்கள். இதற்காகப் பரம்பரை அறங்காவலர் செண்பகராமனோடு ஒரு இரவில் திட்டமிட்டுப் பயணம் செய்துகொண்டே, படிகள் கட்டும் இடத்தைத் தேர்வுசெய்து கொண்டே கோவில் தல புராணத்தை அசைபோடுகிறோம். இனி... முருகன் வள்ளியம்மையை கரம்பிடித்த வரலாற்றில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் பின்னிப் பிணைந்து உள்ளன. வள்ளி வாழ்ந்த ஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர். வள்ளி மீது காதல் கொண்டு முருகன் அவரைத் துரத்துகிறார். வேடனாக வந்த முருகப்பெருமானை…