உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கார்த்திகை மாத எண்ணியல் பலன்கள் - ஆர் மகாலட்சுமி

நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை 1, 10, 19, 28 இந்த எண்ணுக்குரிய நாயகன் சூரியன் ஆவார். இந்த எண்காரர்கள் பேசினால், சொற்கள் காத்ரமாக, எதிரில் உள்ளவர் பதில் பேசமுடியாதபடி கண்டிப்புடன் இருக்கும். இந்த மாதம் வீடு, மனை விஷயமாக, அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு விஷயம் நடக்கும். அரசாங்கம் உங்கள் மனைகளை எடுத்து, ஆக்கிரமித்து இருந்தால், அதன் சம்பந்தமான நல்ல மாற்றங்கள் கிடைக்கும். உங்கள் பெற்றோர் சம்பந்தமான, அரசு விஷயங்களில் நல்ல பதிலும், பலனும் கிடைக்கும். உங்கள் தொழில் சார்ந்த முன்னேற்றம் கைபேசி தகவல்களாக வரும். தொழில் நல்ல லாபம் தரும். உங்கள் மூத்த சகோதரனும், உங்கள் இளைய சகோதரியும், ஒரு தொழில் முயற்ச…