Nakkheeran
மதுரையைக் காத்த காவற்குன்றங்கள் - மு. அருளானந்தம் (93)
பெரும் பூடமும் பாண்டியப் பேரரசரின் இறுதிக் கொடையும்நக்கீரன் பார்த்த பெரும் பூடம், இன்று மதுரை பெரியார் பஸ்டாண்டுக்கு அருகே இருக்கும் இரயில்வே மேம்பாலத்திற்கு வடபுறம், சர்ச் உள்ள பகுதியாகும். அதாவது- மதுரை கோட்டையின் மேற்கு நுழைவாயிலுக்கு நேர் எதிரே. இந்தப் பூடம் முழுவதும் வேப்பம்பூ சல்லடத்தால் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பூடத்திற்கு மேலே பனை ஓலைகளினால் கூரை வேயப்பட்டிருந்தது. பூடத்திற்கு முன்பக்கம் மூங்கில் தப்பைகளால், அப்பூடத்தின் உயரத்திற்கு ஏற்ப சதுரம் சதுரமாகச் சட்டங்கள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தன. அவை மேலே இருந்த பனங்கூரையோடு அசையாவண்ணம் பொருத்தப்பட்டிருந்தன. அதன் சட்டங…