உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சகலமும் அருளும் சௌந்தர்ய லஹரி - ஜி .ஏ. பிரபா

இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் நடத்துகிற சக்தி ஒன்று இருக்கிறது. "பிரம்மத்தைத் தவிர எதுவும் இல்லை' என்கிறார்கள். அந்தப் பிரம்மத்தின் நடுவில்தான் இந்த மகா சக்தியும் இருக்கிறது. பிரம்மத்தை நேரடியாக உபாசிக்க முடியாதவர்கள், அதன் சக்தியிடம் மனதை செலுத்தி பக்தி செய்தால், காரிய ரூபமற்ற அந்தப் பிரம்மத்தை அடைய முடியும் என்பது காஞ்சி மகா பெரியவாளின் வாக்கு. அம்பிகையை உபாசித்தால் அனைத்து தெய்வங்களையும் உபாசித்த பலன் கிடைக்கும் என்கிறது ஸ்ரீலலிதா அம்பிகையின் மிக உன்னதமான வழிபாட்டு நூல் "சௌந்தர்ய லஹரி.' அம்பிகையை உபாசித்து, பல இடங்களில் அவளைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். அவர் இந்த தேசத்தில் தோன்…