Nakkheeran
நவம்பர் மாத ராசி பலன்கள்
மேஷம் மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 18-ஆம் தேதிவரை 4-ல் நீசமாக இருக்கிறார். உங்கள் காரியங்களில் சிலநேரம் தேக்கம் ஏற்பட்டாலும் குரு உங்கள் ராசியை 5-ல் நின்று பார்ப்பதால், நன்மைகளும் உண்டாகும். 13-ஆம் தேதிமுதல் கும்பத்திலிருந்த ராகுவும் 10-ல் மகரத்திற்கு மாறுகிறார். 5-ல் நின்ற கேது 4-ல் கடகத்திற்கு மாறுகிறார். அது ஒருவகையில் நல்லதுதான் செய்யும். பழைய தொழில் செய்துகொண்டிருந்தவர்களுக்கு சிலரில் அதை அபிவிருத்தி பண்ணக்கூடிய வகையில் பார்ட்னர்ஷிப் அமையும். ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால் சுபவிரயத்தை செய்து தொழில் விருத்தி பண்ணலாம். சில நேரம் மனக்குழப்பம், நிம்மதிக்குறைவு ஏற்படும். மனதை பக்குவப்பட…