உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அண்ணாமலை கோபுர அற்புதங்கள்! திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - நவம்பர்-24 - அயன்புரம் த. சத்தியநாராயணன்

கோபுரங்கள்தான் ஒரு ஊரில் கோவில்கள் இருப்பதற்கான கம்பீரமான அடையாளங்கள்! கோபுரங்கள்தான் கோவிலுக்குள் இறைவனை தரிசிக்க செல்கிற அழகிய நுழைவாயில்கள். கோவிலுக்கு செல்பவர்கள் முதலில் செய்கிற இறை தரிசனம் கோபுரங்கள்தான். இதைத்தான் முன்னோர்கள் "கோபுர தரிசனம் கோடிபுண்ணியம்' என்று சொன்னார்கள். கோவில் என்றால் பிரம்மாண்டமாய் ஒரு கோபுரம் நிச்சயம் இருக்கும். ஆனால் பஞ்சபூத சிவாலயங்களில் அக்னி தலமாக விளங்குகிற திருவண்ணமாலை திருக்கோவில் ஒன்பது கோபுர நுழைவாசல்களைக் கொண்டிருக்கிறது என்பது சிறப்பான அம்சமாகும். சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பல கட்டட சிறப்புக்களுடன் கட்டப்பட்ட அதிசய ஆலயமாக திருவண்ணாமலை திருக்கோவில…