உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“போலி நூல் கொள்முதல் ஊழல்; வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்!

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்களை வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. நூல் கொள்முதலில் கூட ஊழல் செய்வார்களா? என நாடு முழுவதும் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்த அனைத்து உண்மைகளையும் வெளியிட்டு ஊழல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும். கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக கடந்த 6&ஆம் தேதி குற்றச்சாட்டுகள் எழுந்தன. பதிப்பக உலகில…