IBC Tamil
இலங்கையில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் தற்போது 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது 48 பாதாள உலகக் குழுக்கள் தொடர்ந்தும் தீவிரமாக இயங்கி வருகின்றன. மேலும் 48 குழுக்கள்...