Indian Express Tamil
கோவையில் பஸ் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு; கடைக்குள் புகுந்த பள்ளி வேன்... காயமின்றி தப்பிய மாணவர்கள்
கோவையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் ஓட்டுநருக்கு நடுவழியில் திடீரென வலிப்பு ஏற்பட்டதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தபோதிலும், வேனில் பயணம் செய்த மாணவர்கள் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனி வழியாக இன்று காலை சுமார் 8 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்…