உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பாலி@ல் சீண்@லைத் தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொ@ரம்- ஓடும் ரயிலில் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு

மும்பை புறநகர் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்குக் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை உணர்த்தும் வகையில், கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மும்பையின் போரிவலி ரயில் நிலையத்திலிருந்து விரார் நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் அந்த இளம்பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் நாய்காவ் ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, 53 வயதான ஜிதேந்திர ஹிர்முகே என்ற நபர் அப்பெண்ணுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து, தவறான முறையில் தொடர்ந்து தொட்டுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அப்பெண், "உன் வீட்டில் தாயோ அல்லது சகோதரியோ இல்லையா?" எனக் கேட்டு அந்த நபரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால…