உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

நரிக்குறவர் காலனியில் இன்ஸ்பெக்டர் அராஜக வீடியோ..! - "இப்படி தான் விசாரிப்பீங்களா?"

தீபாவளி அன்று மோதல்..! தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனியில், தீபாவளி அன்று மது அருந்தியபோது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்த தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூக்கையா என்பவர் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, இந்தச் சம்பவம் தொடர்பாக மாவீரன், ரவி, குமார் ஆகி…