Indian Express Tamil
மீண்டும் மீண்டுமா? கைதிகள் தப்பிக்கும் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி எப்போது? வானதி சீனிவாசன் கேள்வி
மதுரையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு மதுரை போதை தடுப்பு நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பா.ஜ.க. தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்தவர் ராஜா. போதை பொருள் தடுப்பு வழக்கில் கைது வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை காவல்துறையினர் இன்று மதுஐர போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இவருக்கு தண்டனை வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு தப்பி…