Polimer News
ஆந்திராவில் விசாகப்பட்டினம் - பாபட்லா இடையே கரையைக் கடக்கிறது அர்னாப் புயல்..
வங்கக்கடலில் நிலவி வந்த அர்னாப் புயல், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் - பாபட்லா இடையே நள்ளிரவு முதல் கரையைக் கடந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது மணிக்கு சுமார் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் விசாகப்பட்டினம், பாபட்லா, கோனசீமா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் விடியவிடிய மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் மாவட்டத்திலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆந்திரா மட்டுமின்றி, ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநில கடலோரங்களிலும் கடல் கொந்தளிப்பாக…