IBC Tamil
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி - ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி!
அமெரிக்காவில் பதிவான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் வோஷிங்டன் டிசியின் மத்திய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். சந்தேகிக்கப்படும் நபர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லோகன் சர்க்கிள் பகுதியில் உள்ள 15 ஆவது வீதி மற்றும் P வீதி சந்திப்பில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.