உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழ் கற்பதில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி; பள்ளிக் கல்வித் துறை அதிரடித் திட்டம்

அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில், மொழி கற்பதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் மொழிப் புலமையை வளர்த்தெடுப்பதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், தமிழ் கற்பதில் ஆர்வமும், இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமும் கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களால் கண்டறியப்பட உள்ளனர். வழக்கமான பாடத்திட்டத்தைத் தாண்டி அவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் இந்தத் தேர்வு நடைபெறும். இத்திட்டத்தைச் சிறப…