Dinamani
முதல்வர் விஜய்யின் 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்: அமைச்சர் கீர்த்தனா
தவெகவின் 6 மாதகால ஆட்சியில் ரூ. 1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, தவெக ஆட்சி அமைந்த மே மாதம் முதல் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்…