Chennai News Updates: வங்கக் கடலில் திங்கள் கிழமை (நவ.16) உருவாகிறது அக்வான் புயல்
தாழ்வுப் பகுதி உருவானது: இன்று அதிகாலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொள்ளையடிக்க ஒத்திகை: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் கடந்த 5ம் தேதி அதிகாலையில் முகமூடி அணிந்தபடி கொள்ளையடிக்க திட்டமிட்டு திருடன் ஒத்திகை பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமிராக்கள் பதிவுகளை விடிய விடிய ஆய்வு செய்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார், பல்வேறு இடங்களிலும் தேடுதல்…