உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

164 பேரில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை; எஸ்.சி, எஸ்.டி மாணவர்களை வதைப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஆர்.டி.ஐ (RTI) மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங…