Indian Express Tamil
சி.எம் செல்லுக்கு 500+ புகார்கள்; கூடுதல் கட்டணம் குறித்து இன்ஜினியரிங் கல்லூரிகளை ஆய்வு செய்ய குழுக்கள் அனுப்பிய தமிழக அரசு
கடந்த நான்கு மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததை அடுத்து, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) 20 ஆய்வுக் குழுக்களை அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு வரும் புகார்களின் பட்டியலில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. தனியார் பொறியியல் கல்லூரிகளில் சான்றிதழ்களை திரும்ப வழ…