IBC Tamil
வெற்றிகர பயணம்: சாதனை படைத்தது சீனாவின் முதல் மின்சார பயணிகள் விமானம்
19 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சீனாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட CE-25A மின்சார வர்த்தக விமானம், ஷான்டாங் மாகாணத்தின் பின்ஷோ நகரில் தனது முதல் ஆட்கள் பயணித்த சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அந்நாட்டின் மின்சார விமானப் போக்குவரத்து வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் செய்தியின்படி, 10 தொன் எடை கொண்ட அந்த விமானம், இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனைப் பொறியாளருடன் சனிக்கிழ...