Polimer News
நவ.18ல் த.வெ.க.வின் 2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் நவம்பர் 18ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். ஏற்கெனவே கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட நிகழ்ச்சியில், 5 மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.