Nakkheeran
”நரேந்திர மோடியின் கோட்டை தகர்ந்ததா?”; வாரணாசியில் பாஜகவை வீழ்த்திய சமாஜ்வாதி
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இப்போது நடந்து முடிந்த சட்ட மேலவை (எம்.எல்.சி) தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது, அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த 11 சட்ட மேலவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்ற, இந்த 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மொத்தமுள்ள 11 இடங்களில் பாஜக 5 இடங்களிலும், சமாஜ்வாதி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், மிகவும் முக்கிய…